பெலாரஸில் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை  நடத்த உக்ரைன் ஒப்புதல்?

Must read

கீவ்

பெலாரஸில் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் நாட்டுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக அமைதியின்மை நிலவி வந்தது.   உக்ரைன் எல்லையில் ரஷ்யப்படைகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.  இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனில் கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது. 

ரஷ்யாவின் விமானப்படை தாக்குதலால் உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் அழிக்கப்பட்டன  இதனால் அங்குள்ள வெளிநாட்டவர் நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.  இதையொட்டி அங்குள்ள இந்தியர்கள் எல்லையில் உள்ள நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க  உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்யா ஒப்புக் கொண்டது.  இந்த பேச்சு வார்த்தை பெலாரஸில் நடக்கும் எனத் தெரிவித்த நிலையில் உக்ரைன் அதற்கு மறுப்பு தெரிவித்தது.  தற்போது பெலாரஸில் பேச்சு வார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல்கள்  வெளியாகி உள்ளன.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article