தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் ‘புஷ்பா’ படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

செம்மரக்கடத்தலை மையப்படுத்தி புஷ்பா தயாராவதாக சொல்லப்படுகிறது. கடத்தல்காரராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். பகத் பாசில் இதில் வில்லனாக நடிக்கிறார்.

பெரிய படம் அதனால் இரண்டு பாகங்களாக வெளியிடுகின்றனர். முதல் பாகம் புஷ்பா – தி ரைஸ் டிசம்பர் 17-ம் தேதி திரைக்கு வருகிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் ஒரு பாடல் காட்சி எஞ்சியுள்ளது. அல்லு அர்ஜுன் ஆடும் மாஸ் பாடல் காட்சி. உடன் ஆட முன்னணி நடிகைகளை ஆலோசித்து வந்தனர். பூஜா ஹெக்டே உள்பட பல நடிகைகளின் பெயர்கள் அலசப்பட்ட நிலையில், இறுதியாக சமந்தா பாடல் காட்சியில் ஆட ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்.

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் சமந்தா. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அடுத்தவரின் படத்தில் சமந்தா குத்தாட்டம் போடுவது இதுவே முதல் முறை ஆகும்.

அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட ரூ. 1.5 கோடி கேட்டிருக்கிறார் சமந்தா என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் இது குறித்து படக்குழு இதுவரை எதுவும் கூறவில்லை.

இப்படம் வரும் டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் ‘புஷ்பா’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஒரு பெரும் தொகைக்கு லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை ‘புஷ்பா’ படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் படக்குழு தெரிவித்துள்ளது.

 

[youtube-feed feed=1]