சண்டிகர்: நடைபெற்ற முடிந்த பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களும் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி மாநிலத்தில் உள்ள  109 முனிசிப்பல் கவுன்சில்கள் பதவிகளுக்கும், 7 முனிசிப்பாலிட்டி கார்ப்பரேஷன்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 9,222 பேர் போட்டியிட்டனர்.  தேர்தலில், 71.39 சதவீத வாக்குப் பதிவானது.

அதைத்தொடர்ந்து இன்று (17ந்தேதி(  வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.  வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடனே பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்க தொடங்கியது. பாஜக குறைந்த அளவிலான வாக்குகளை பெற்றன. அதுபோல சுயேச்சைகளும் ஏராளமான இடங்களில் வெற்றி பெற்று வருகின்றனர்.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள மோகா, ஹோஷியார்பூர், கபுர்தலா, அபோஹர் , பதீண்டா , பதான்கோட் மற்றும் படாலா  ஆகிய 7 மாநகராட்சிகளிலும் காங்கிரஸ்  கைப்பற்றி  உள்ளது.  மேலும்,  பத்னி கலன், பானூர், பர்னாலா என அனைத்தும் நகராட்சி பகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் செல்கிறது.

2வது இடத்தில், முன்னாள் பாஜக கூட்டணி கட்சியான,  சிரோமணி அகாலி தளமும் பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதையடுத்து பல இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.  பாஜக கடைசி இடத்துக்கு சென்று பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ப 9,222 வேட்பாளர்களில், சுயேச்சைகள் 2,832 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

50 வார்டுகளைக் கொண்ட அபோஹர் முனிசிபல் கார்ப்பரேசன் தேர்தலில்  49 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஒரே ஒரு இடம் சிரோன்மணி அகாலிதளம் கட்சிக்கு கிடைத்துள்ளது. இங்கு பாஜக, ஆம்ஆத்மி உள்பட மற்ற அனைத்துக்கட்சிகளும் துடைத்தெறியப்பட்டு உள்ளது.

மற்றொரு கார்ப்பரேசனான மோகா  முனிசிபல் கார்ப்பரேசன் தேர்தலில் 20 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.  சிரோன்மணி அகாலிதளம் கட்சிக்கு 15 இடங்களும், ஆத்ஆத்மி கட்சிக்கு 4 இடங்களும், பாஜகவுக்கு ஒரே ஒரு  இடமும், மற்ற கட்சிகளுக்கு 10 இடங்களும்  கிடைத்துள்ளது. 

 

50 வார்டுகளைக் கொண்ட படாலா முனிசிபல் கார்ப்பரேசன் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 36 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.  சிரோன்மணி அகாலிதளம் கட்சிக்கு 6 இடங்களும், பாஜகவுக்கு 4 இடங்களும், ஆம்ஆத்மி கட்சிக்கு 3 இடங்களும், மற்றவைக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளது.

கபுர்தலா முனிசிபல் கார்ப்பரேசன் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 45 இடங்களை கைப்பற்றியுள்ளது.  சிரோன்மணி அகாலிதளம் கட்சிக்கு 3 இடங்களும், , மற்றவைக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளது. பாஜக,  ஆம்ஆத்மி கட்சிகள் முற்றிலும் துடைத்தெறியப்பட்டு உள்ளது.

பதீண்டா முனிசிபல் கார்ப்பரேசனுக்கு நடைபெற்ற தேர்தலில்  காங்கிரஸ் கட்சி 43 இடங்களை கைப்பற்றியுள்ளது.  சிரோன்மணி அகாலிதளம் கட்சிக்கு 7 இடங்களும், . பாஜக,  ஆம்ஆத்மி உள்பட மற்ற அனைத்துக் கட்சிகளும்  துடைத்தெறியப்பட்டு உள்ளது.

ஹோஷியார்பூர் முனிசிபல் கார்ப்பரேசனுக்கு நடைபெற்ற தேர்தலில்  காங்கிரஸ் கட்சி 41  இடங்களை கைப்பற்றியுள்ளது.  இங்கு பாஜக 4 இடங்களை கைப்பற்றிய நிலையில், மற்ற கட்சிகள் 4 இடங்களை பிடித்துள்ளது, சிரோன்மணி அகாலிதளமும், ஆம்ஆத்மி  கட்சியும் தோல்வியை சந்தித்துள்ளது.

பதான்கோட் முனிசிபல் கார்ப்பரேசனுக்கு நடைபெற்ற தேர்தலில்  காங்கிரஸ் கட்சி 37 இடங்களை கைப்பற்றியுள்ளது.  சிரோன்மணி அகாலிதளம் கட்சிக்கு 1 இடமும், . பாஜகவுக்கு 11 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 1 இடமும்கிடைத்துள்ளது. ஆம்ஆத்மி  துடைத்தெறியப்பட்டு உள்ளது.