பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவரான பன்வாரிலால் புரோகித் நீண்டகாலமாக பாஜக-வுடன் இணைந்திருந்தார்.

2021 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

இதற்கு முன், 2016 – 2017ல் அசாம் மாநில ஆளுநராகவும் 2017 – 2021 வரை தமிழ்நாடு ஆளுநராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து மாநில அரசுடன் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி திரௌபதி முர்மு-வுக்கு எழுதியுள்ள கடிதத்தில்:

தனிப்பட்ட காரணங்களுக்காகவும் வேறு சில கடமைகள் இருப்பதாலும் தனது பஞ்சாப் மாநில ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகி ஆகிய பதவிகளை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.