ண்டிகர்

ஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.

விரைவில் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சண்டிகரில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்,  அப்போது செய்தியாளர்கள் அவரிடம் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

பஞ்சாப் முதல்வர் பகவ்ந்த் மான் இதற்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை  மாறாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 13 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சியை பெரிதும் விரும்புவடால் சட்டமன்ற தேர்தலில் 92 இடங்களில் மக்கள் வெற்றி பெறச் செய்தனர் என்று,ம் கூறி உள்ளார்.