20ந்தேதி பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: இன்று மாலையுன் தேர்தல் பிரசாரம் நிறைவு…

Must read

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 20ந்தேதி நடைபெற உள்ளதால்,  இன்று மாலையுன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

117 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக  நாளை மறுமினம் (20ம் தேதி நடைபெறுகிறது.)  இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவி வருகிறது.  ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற ஆம்ஆத்மி, பாஜக போன்ற கட்சிகளும் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதல் மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்கின்  ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சாவின்  ‘சிரோன்மனி அகாலி தளம்’ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக களம் காணுகிறது.

ஏற்கனவே கடந்த  கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ப சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. எதிர்க்கட்சியாக 20 இடங்களில் வென்ற ஆம்ஆத்மி இடம்பெற்றது. அகாலிதளம் 15 இடங்களையும் பாஜக 3 இடங்களையும்,  லோக் இன்சாப் கட்சி 2 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. இந்த முறை அங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆம்ஆத்மி கட்சி பணியாற்றி வருகிறது.

தேர்தல் நடைபெற ஒரே ஒருநாள் எஞ்சியிருக்கும் நிலையில் இன்று மாலையுடன் அங்கு அரசியல் கட்சிகளின் சூறாவளி பிரச்சாரம் நிறைவடைகிறது. இறுதி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. விவசாயிகள் போராட்டம் காரணமாக பாஜகவுக்கு வாய்ப்பில்லை என்றாலும், ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளதாக அரசியல் நிபுணகர்கள் கூறி வருகின்றனர்.  இருந்தாலும் வாக்குப்பதிவின்போது முடிவுகள்  மற்ற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தலை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன்! பஞ்சாப் மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேச்சு…

மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள்! பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் மோடியை விளாசிய பிரியங்கா காந்தி

More articles

Latest article