புனே:

ணி பாதுகாப்பு இல்லைததால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதிவைத்துவிட்டு ஐ.டி. பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணா குருபிரசாத். இவர் மகராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் கடந்த 9ம் தேதி பணிக்குச் சேர்ந்தார். அவருக்கு உணவு வசதியுடன் தங்குமிடத்தை அந்நிறுவனம் ஏற்பாடு செய்துதந்தது.

இந்த நிலையில் கடந்த புதன் கிழமை அதிகாலை, விடுதியின் ஆறாவது தளத்தில் இருந்து கோபாலகிருஷ்ணா கீழே குதித்தார். பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்த காவலாளிகள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கோபிகிருஷ்ணாவின் அறையை பரிசோதனை செய்தபோது, ஒரு கடிதம் கிடைத்தது. அதில், “ஐ.டி. துறையில் பணி பாதுகாப்பு இல்லை. ஆகவே எனது எதிர்காலம், குடும்பம் குறித்து மிகவும் கவலைப்படுகிறேன்” என்று கோபாலகிருஷ்ணா குறிப்பிட்டிருக்கிறார்.

ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள், எந்த நேரத்திலும் பணியைவிட்டு நீக்கப்படலாம் என்ற அச்சம் பரவி உள்ள நிலையில் கோபாலகிருஷ்ணாவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.