நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காகப் புதுச்சேரி சட்டப்பேரவை ஜூலை 20 கூடுகிறது

Must read

புதுச்சேரி

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வரும் 20 ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூட உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாமல் உள்ளது.

அவற்றில் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் ஒன்றாகும்.

இம்மாநிலத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.

நேற்று புதுச்சேரி சட்டப்பேரவை செயலகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அதில்,

”புதுச்சேரி சட்டப்பேரவை 2020 ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.30 மணிக்குத் துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

அதனைத் தொடர்ந்து நண்பகல் 12.05 மணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்”

என அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article