புதுச்சேரி

டும் கோடை காரணமாகப் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஜூன் மாதம் 7 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடும் கோடையின் தாக்கத்தால் புதுச்சேரியில் பள்ளிகளின் முழு ஆண்டு தேர்வு அட்டவணை மாற்றப்பட்டது. இதன்படி முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தி விடுமுறை அறிவிக்கப்பட்டு கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் ஜூன் 1 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக விடுமுறை ஒரு வாரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைப்போலப் புதுச்சேரியிலும் பள்ளி விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்தன.

புதுச்சேரி கல்வித்து றை அமைச்சர் நமச்சிவாயம் இது குறித்து,

“புதுச்சேரியில் பள்ளி விடுமுறை ஒரு வாரக் காலம் நீட்டிக்கப்பட்டு வரும் 7-ம் தேதி மீண்டும் பள்ளிகள் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாமில் திறக்கப்படும்.   ஏற்கனவே புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு விதிமுறைகளைத் தளர்த்தி அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.

புதுச்சேரியில் உள்ள 127 அரசுப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்காக  சிபிஎஸ்இ பாடத்திட்டப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.   இதில் முதல்கட்டமாகக் காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளுக்கு பாடபுத்தகம் அனுப்பி வைத்துள்ளோம். ஏற்கன்வே புதுச்சேரிக்கு ஒரு பகுதி புத்தகம் வந்துள்ள  நிலையில் நாளை அனைத்து புத்தகங்களும் வந்து விடும்.”

எனத் தெரிவித்துள்ளார்.