புதுச்சேரி: மாநிலத்தில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் திருக்கோயில், வரும் 22ந்தேதி கொண்டாடப்பட இருக்கும் விநாயகர் சதுர்த்திக்காக கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்படும்  பணி நடைபெற்று வருகிறது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கொரோனா தளர்வில் அனுமதி வழங்ககப்பட்டுள்ள கோவில்களில், விநாயகர் பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரியில் புகழ் பெற்று விளங்கும் மணக்குள விநாயகர் கோயிலில்  நாளை விசேண பூஜைகள் நடைபெற உள்ளதால், இன்று கோவிலை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில்  நடை திறக்கப்பட்டு, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைறும். பின்னர், விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெறும்.

நாளை தினம் கோவிலில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே திரள்வார்கள் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.