புதுச்சேரி:
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று மீண்டும் துவங்குகிறது.

இன்று காலை ஒன்பது மணியளவில் துவங்கும் இந்த கூட்டத்தொடரில் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்ய உள்ளார்.

வரும் 30-ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த கூட்டத் தொடரில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.