சென்னை:
சென்னையில் பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.

சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

இந்த கனமழை காரணமாக, துபாய், பக்ரைன் மற்றும் லக்னோ விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்ற விமானங்களும் தாமதமாகியது.