புதுச்சேரி: புதுச்சேரி  சட்டசபை பிப்ரவரி  3-ந்தேதி கூடுவதாகவும், 12 ஆண்டுகளுக்கு பிறகு,  இந்த முறை  முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார்.

இ,ன்று செய்தியளார்களை சந்தித்த புதுச்சேரி சபாநாயகர் செல்வம்,   புதுவை சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந்தேதி கூடுவதாக தெரிவித்தார்.  இந்த  குளிர்கால கூட்டத்தொடரில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார். கடந்த 12 ஆண்டுகளாக அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு  வந்ததாகவும், இந்த முறை முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர்,  மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தலைமை செயலாளர் ராஜூவ் வர்மா தடுத்து வருவதாக  குற்றம் சாட்டியவர், தலைமைச்செயலா ளருடன் இணைந்து  சில அரசு அதிகாரிகளும் மத்திய அரசின் திட்டங்களை தடுத்து வருகிறார்கள் என்றவர், மாநிலத்தின் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் திருப்பி அனுப்புவதற்கு அதிகாரிகளே காரணம் இத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.