பாஸ்போர்ட்டை கொரோனா தடுப்பூசி சான்றிதழுடன் இணைப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

Must read

புதுடெல்லி:
ர்வதேச பயணிகளுக்கான பாஸ்போர்ட்டை கொரோனா தடுப்பூசி சான்றிதழுடன் இணைப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தலாக உள்ள சூழலில் இந்தியாவில் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கல்வி, வேலை மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் விளையாட்டு வீரர்கள் உள்பட வெளிநாடு செல்லும் பயணிகளுக்கான தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுபோன்ற பயணிகள் தங்களுடைய பாஸ்போர்ட் உடன் கோவின் சான்றிதழ்களை இணைக்க வேண்டும். கோவிஷீல்டு போன்ற கொரோனா தடுப்பூசி வகை பற்றி அதில் குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

More articles

Latest article