Skip to content
  • Tue. Sep 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது! நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்…

Oct 5, 2020
சென்னை: அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அக்டோபர் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான நிகழ்வுகளுக்கு  தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடற்கரை, தியேட்டர் போன்ற ஒருசில பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது.
இந்த நிலையில்,  மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி மீனவர் நலன் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், தொடர்ந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, சென்னை உயர்நீதி மன்றம், மெரினா கடற்கரை, மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், சென்னையில் கொரோனா ஊரடங்கில்  தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசு என்ன முடிவு செய்துள்ளது என்றும், கடற்கரையில் புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,  அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அக்டோபர் மாதம்  31 வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும், தமிழகத்தில் ஊரடங்கு இந்த மாதம் இறுதிவரை  நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என பதில்  தெரிவித்துஉள்ளது.
மேலும்,
மெரினாவில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் நவம்பர் 9 ந்தேதி திறக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெண்டர் திறப்பு குறித்து நவம்பர் 11க்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கை மீறுவோருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து, வசூலித்து வருகின்றனர். அத்துமீறலில் ஈடுபட்டால் ரூ.500-ம், முக கவசம் அணியாவிட்டாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கா விட்டாலும் ரூ.200-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தடையை மீறி கடற்கரைக்கு வருவோரிடம்,  ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது  குறிப்பிடத்தக்கது.

Post navigation

ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை! கே.எஸ்.அழகிரி
டெல்லி உயர்நீதி மன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணை தொடங்கியது…

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer