ஆர்.கே.நகரில் 21ம் தேதி பொது விடுமுறை

சென்னை:

ஆர்.கே.நகரில் வரும் 21 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இதை முன்னிட்டு 21ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை சென்னை கலெக்டர் பிறப்பித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை 24ம் தேதி நடக்கிறது.
English Summary
Public holiday on 21st in RK Nagar