நாளை முதல் சென்னை புறநகர ரயில்களில் அனைவரும் பயணிக்கலாம்

Must read

சென்னை

நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் பெரும்பாலும் நம்பி உள்ள போக்குவரத்து புறநகர் ரயில் போக்குவரத்து ஆகும்.  ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த வருடம் மார்ச் மாதம் பொதுமக்கள் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி ரத்து செய்யப்பட்டது.  பாதிப்பு குறைந்ததால் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல்; முதல் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால் மீண்டும் பொதுமக்கள் புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.   தற்போது கொரோனா பாதிப்பு சென்னை நகரில் பெருமளவு குறைந்துள்ளது.

இதையொட்டி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பெண்கள் மற்றும் பெண்களுடன் பயணிக்கும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரமும் பயணிக்கலாம்.  ஆண் பயணிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் பிறகு இரவு 7 மணி முதல் கடைசி ரயில் வரை பயணிக்கலாம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

Latest article