காவிரி – அக்னியாறு – குண்டாறு இணைப்பு திட்டத்தின் நிலை என்ன? : சி ஏ ஜி அறிக்கை

Must read

சென்னை

ன்று தமிழக சட்டப்பேரவையில் காவிரி – அக்னியாறு – குண்டாறு இணைப்பு திட்டம் குறித்த சி ஏ ஜி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

காவிரி – அக்னியாறு – குண்டாறு இணைப்பு திட்டம் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.  இந்த திட்டம் இந்த பகுதி மக்களின் 100 ஆண்டு கனவுத் திட்டமாகும்.  இந்த திட்டத்தின் மூலம் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும் எனக் கூறப்பட்டது.

இந்த திட்டத்துக்கு இந்த வருடம் பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் பழனிச்சாமி ரூ.6,941 கோடி மதிப்பில் காவேரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவேரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளைப் புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இன்று இந்த திட்டம் குறித்த சி ஏ ஜி அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2018 ஆம் தேதிஅ அந்த அறிக்கையில் இந்த திட்டம் குறித்த அறிமுகம்,  செயல்பாட்டுத் தணிக்கை மற்றும் பொருளாதார தணிக்கை ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

இதன்படி தமிழகத்தில் உள்ள 10 துறைகளால் இந்த திட்டத்துக்கு ரூ.26.677 கோடி ரூபாய் 2017-18 ஆம் ஆண்டு செலவிடப்பட்டுள்ளது.  இதில் பெரும்பான்மையான செலவுகள்: நெடுஞ்சாலைத் துறை கட்டுமானத்துறை, விவசாயத் துறை, வனவிலங்கு நலத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளால் செலவிடப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் முக்கிய அம்சமான கால்வாய் வெட்டும் பணிக்கு 10 வருடங்களாக எவ்வித தொகையும் ஒதுக்கப்படவில்லை என்பது முக்கிய அம்சமாகும்  மேலும் தடுப்பணை கட்ட கோரப்பட்டிருந்த ரூ248.55 கோடி ஒதுக்கீடு செய்யப்படாததால் இதுவரை 31.571 கன அடி அதிகப்படியான நீர் தேவையில்லாமல் வீணடிக்கப்பட்டுள்ளது.

 

More articles

Latest article