சென்னை: தன்மீது போடப்பட்டுள்ள குண்டாஸை எதிர்த்து பப்ஜி மதன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து மாநிலஅரசு, காவல்துறை பதிலளிக்க உத்தரவு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல யுடியூபர் பப்ஜி மதன் என்பவர்,  யுடியூபில் பப்ஜி விளையாட்டின்  ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்து வந்தாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்மீது  தொழில் ரீதியாக 150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 18-ஆம் தேதி தருமபுரியில் வைத்து போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர் அவர்மீது 4 பிரிவுகளில் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கிடையில் பப்ஜி மதன் தாக்கல் செய்த ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தநிலையில், ஜூலை 6ந்தேதி அவர்மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

[youtube-feed feed=1]