மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சைக்கோ. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, இயக்குநர் ராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. மனநல பாதிப்பு தொடர்பான தலைப்புக்கு அனுமதியில்லை என்று தணிக்கை குழு தெரிவித்துள்ளார்கள்.

இதனால், மறுதணிக்கைக்குச் சென்றது ‘சைக்கோ’ படக்குழு. றுதணிக்கைக்குச் சென்று தலைப்பை உறுதி செய்துவிட்டாலும், என்ன சான்றிதழ் என்பதை இன்னும் தணிக்கை அதிகாரிகள் எழுத்து வடிவில் கொடுக்கவில்லை.

சமீபத்தில் உன்ன நெனச்சு என்ற முதல் பாடலை வெளியிட்டிருந்த படக்குழுவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ‘நீங்க முடியுமா’ என்ற 2-வது பாடலை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

கபிலன் எழுதியிருக்கும் இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ஜனவரி 24-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.