சென்னை:  தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக (அட்வகேட் ஜெனரல்) பிஎஸ் ராமனை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பான கோப்புகள் ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வந்த திமுக வழக்கறிஞர், சண்முகசுந்தரம் இன்று காலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, தனிப்பட்ட காரணங்களுக்காக தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தொடர்ந்து வழக்கறிஞராக பணியாற்றுவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,   தமிழ்நாடு அரசின்  புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பிஎஸ் ராமன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இருப்பினும், இதற்கு ஆளுநர் இன்னும் கையெழுத்து போடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் மூத்த வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட்-ஜெனரல் ஆவார். இவர் முன்னாள் அட்வகேட் ஜெனரலும் திமுக அரசியல்வாதியுமான வி. பி. ராமனின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.