சென்னை:

யிர்போகும் நாளில் அதிமுக கொடி போர்த்துவது தனது வாழ்நாள் பெருமை” என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்து உள்ளார்.

மோடி வேட்புமனு தாக்கல் நிகழ்வில் கலந்துகொண்ட ஓபிஎஸ், அங்கு பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இது பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓபிஎஸ் கவர்னர் பதவி கோரி வருவதாகவும், பாஜகவில் சேர உள்ளதாகவும் அமமுக நிர்வாகி தங்கத்தமிழ்செல்வன் குற்றம் சாட்டியிருந்தார்.  இது அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  தான் ‌இணைய உள்ளதாக கூறப்படு‌வது வடிகட்டிய பொய்‌ என விளக்கம் அளித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், சாதாரண பெரியகுளத்தைச் சேர்ந்த தனக்கு பல பெருமைகளை அள்ளித்தந்த அதிமுகவை விட்டு, பாஜகவுக்கு செல்லப்போகிறேன் என்று சில உள்நோக்கம் படைத்த ஊடகங்கள் அடுக்காத ஒருபுரளியை அவதூறாக பரப்பி வருகின்றன.

அதிமுக கூட்டணி ஈட்ட இருக்கும் மாபெரும் வெற்றியை நினைத்து, குலை நடுக்கம் கொள்ளும் சிலர் வதந்திகளை பரப்பி, தன்னையும், தனது அரசியல் வாழ்க்கையையும் காயப்படுத்த அலைவதை நினைத்து மிகுந்த வேதனை கொள்கிறேன்.

அதிமுகவை இமையாக காப்பதற்கு தனது ஆயுள் முழுவதையும் கட்சிக்காக ஒப்படைத்து தொண்டாற்றுகிற ஓர் ஊழியன் என்றும், உயிர்போகும் நாளில் அதிமுகவின் கொடி போர்த்து‌தையே வாழ்நாள் பெருமையாக கொண்டுள்ளேன்.

அடுக்காத பொய் குற்றச்சாட்டுகளை கழகத்தி‌னரும், தன்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழக மக்களும் ஏற்கமாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.