சென்னை:

ய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்  தெரிவித்து உள்ளனர். போராட்டத்தின் வடிவங்கள் 28ம் தேதி வழக்கு விசாரணைக்கு பிறகு மேலும் தீவிரப்படுத்தப்படும்  என்றும் தெரிவித்து உள்ளனர்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பபான ஜாக்டோ ஜியோவின் போராட்டம் இன்று 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக அரசு பணிகள், பள்ளிகள் முடங்கி உள்ளன.

இதற்கிடையில் சென்னை  உயர்நீதி மன்றத்தில் மாணவன் கோகுல் என்பவர், அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கின் விசாரணையை தொடர்ந்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் 25ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 28ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  திருவல்லிக்கேணியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நீதிமன்ற உத்தரவை ஏற்று பணிக்கு திரும்புவதா? அல்லது தொடர்ந்து போராட்டம் நடத்துவதா? என்பது குறித்து நிர்வாகிகளிடையே விவாதம்நடைபெற்றது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள், தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகள், போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

ஏற்கனவே திட்டமிட்டபடி  மாவட்ட அளவில் நாளை மறியல் போராட்டங்கள் நடைபெறும் என்றும்,  போராட்டத்தின் வடிவங்கள் 28ஆம் தேதிக்குப் பிறகு தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், சென்னை உயர்நீதி மன்றம் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை ஏதும் விதிக்கவில்லை என்ற நிர்வாகிகள்,  28ஆம் தேதி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு கூறினர்.