ழனி 

ழனிமலை முருகன் கோவிலில் சேலத்தைச் சேர்ந்த பக்தர்களை பாதுகாவலர் தாக்கியதை எதிர்த்து போராட்டம் நடக்கிறது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோவிலில் சேலம் மாவட்டம் எடப்பாடி பக்தர்கள் மற்றும் ஈரோடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்துச் செல்ல சிறப்பு வழி கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது.

இந்த வழியில் எடப்பாடி பக்தர்களும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயற்சி செய்தனர்.  கோவில் பாதுகாவலர்கள் கோவில் அதிகாரிகள் எடப்பாடி சேர்ந்த சந்திரன் என்பவரை இழுத்துக் கொண்டு சென்று தாக்கியதாகவும் மண்டையை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

காயம் அடைந்த சந்திரன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் பழனி மலைக்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எடப்பாடி சேர்ந்த பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் கோவில் வளாகத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  தங்களைத் தாக்கிய பாதுகாவலர் வரும் வரை நாங்கள் கலந்து செல்ல மாட்டோம் எனப் பக்தர்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

கோவில் உதவி ஆணைய லட்சுமி அவர்கள் தாக்கியதாகக் கூறப்படும் கோவில் அதிகாரி மற்றும் பாதுகாவலர்களை இடைநீக்கம் செய்வதாகக் கூட்டத்தில் கூறியதைக் கேட்ட ஒரு பிரிவினர் சென்று விட்டார்கள். மற்றும் ஒரு பிரிவினர் அந்த பாதுகாவலர்கள் வரும் வரை நாங்கள் செல்ல மாட்டோம் எனப் போராட்டத்தில் உள்ளனர்.