சென்னை

தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நாளை முதல் தொடக்கபட உள்ளது.

தமிழக அரசு உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

உங்கள் தொகுதியில் முதல்வர்; இல்லம் தேடி கல்வி திட்டம்; மக்களைத் தேடி மருத்துவம்; நான் முதல்வன்; இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48; புதுமைப் பெண்; முதலமைச்சரின் காலை உணவு; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; கள ஆய்வில் முதலமைச்சர்; மற்றும் மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு திட்டங்களை று முதல்வர் தொடங்கி உள்ளார்

அவ்வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் நாளைத் தொடங்க உள்ளது. இந்த திட்டம் முகாம், சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.

இந்த திட்ட், முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், மாவட்ட ஆட்சித் தலைவரால் முன்கூட்டியே பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட உள்ளது,. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்