டில்லி:

ஐபிஎல் போட்டிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் கவுபாவை ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

பின்னர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘‘பாதுகாப்பை அதிகரிப்பதாக தமிழக அரசும், சென்னை காவல் துறையும் உறுதியளித்துள்ளது. உள்துறை செயலாளர் டிஜிபியிடம் பேசினார். ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க டிஜிபி.யை கவுபா கேட்டுக் கொண்டார்” என்றார்.

இந்நிலையில் ராஜீவ் கவுபா தமிழக உள்துறை செயலரிடம் சென்னையில் நடைபெறக் கூடிய 7 ஐபிஎல் போட்டிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என போன் மூலம் வலியுறுத்தியுள்ளார்.