சென்னை:

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.

சென்னையில் இன்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடந்தது. பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த 780 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘‘திரைத்துறையை சேர்ந்த பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோரை கைது செய்து, அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி நடத்தி காவிரி போராட்டத்தை திசைதிருப்ப தமிழக காவல்துறையை அதிமுக அரசு பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது’’ என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.