சென்னை:

ருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தை அருப்புக்கோட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கின் முக்கியத்துவம் கருதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த 17ந்தேதி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவனங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை  தவறான பாதையில் அழைக்கும் பேராசிரியையின் ஒலிநாடா வெளியானது. அதில், மாணவிகளுக்கு அதிக  மதிப்பெண், சலுகைகள், பணப்புழக்கம் போன்ற ஆசைகளை காட்டியது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் கர்வனர் மாளிகை உள்பட, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்து, ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் வழக்கு தொடர்பான கோப்புகளை பெற்று, சிபிசிஐடி பிரிவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். சி.பி.சி.ஐ.டி காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர், முதற்கட்டமாக இந்த வழக்கு குறித்து இதுவரை விசாரணை நடத்தி வந்த காவல்துறையினரிடம் தகவல்களை கேட்டு வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து இன்று சம்பந்தபட்ட தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.