கோவை:

னிமொழி குறித்து சர்ச்சை பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா கோவையில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, எச்.ராஜா தன்மானமுள்ள மனிதனாக இருந்தால், போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வெளியே வர வேண்டும். அவ்வாறு வர முடியுமா? என சவால் விடுத்தார்.

நேற்று முன்தினம் மாலை கவர்னர் செய்தியாளர் சந்திப்பின்போது, பெண் செய்தியாளர் கன்னத்தில் தட்டியது குறித்து திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக பா.ஜ. தேசிய செயலாளர் எச்.ராஜா, கனிமொழியின் பிறப்பு குறித்து கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்திருந்தார்.

இது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். ராஜாவின் கொடும்பாவியையும் கொளுத்தினர்.

இந்நிலையில்  பொதுக்சுகூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா,  தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் படிப்படியாக கட்சி மற்றும் நிர்வாகங்களில் உயர்ந்தவர் என்றும், அவரின்  வளர்ச்சி என்பது சுக பிரசவம் என்று கூறினார்.

மேலும், திமுக தலைவர் குறித்து ராஜா பதிவிட்ட கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும்,  பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தன்மானமுள்ள மனிதனாக இருந்தால் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வெளியே வர முடியுமா? என்றும் கேள்வி விடுத்தார்.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் காவிரி பிரச்சனைக்காக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஒரு துரும்பை கூட தூக்கி போடவில்லை என்று குற்றம் சாட்டியவர்,  தன்மானத்தை விட இனமானம் முக்கியம் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார் என்று கூறினார்.

அந்த கூட்டத்தில், காவிரி பிரச்சினையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ, எம்.பிக்கள் ராஜினாமா செய்யலாம் என்று ஸ்டாலின் வற்புறுத்தியதாகவும், ஆனால், எடப்பாடி பழனிசாமி அந்த யோசனையை  ஏற்கவில்லை என்றும் கூறினார்.

இதுபோலவே நீட் பிரச்சினை, காவிரி நதி நீர் உரிமைகளை பெற்று தராத தமிழக அரசு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ. 46 கோடியில் நினைவு மண்டபம் கட்டுகிறது என்றும் கூறினார்.