நாங்களும் ரவுடிதான்!: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடி பேச்சு

Must read

மிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.  இதையடுத்து  செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட நேர்த்துக்கு செய்தியாளர்கள் வந்துவிட,  ப்ரமீஸ் ஆரம்பிக்காமல் தாமதமாகிக்கொண்டே இருந்தது.  இந்த நிலையில் செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்ப… ஏனோ டென்ஷன் ஆகி, “நாங்க மிரட்டற அணி.. அது இது” என  கத்த ஆரம்பித்துவிட்டார் பிரகாஷ்ராஜ்.

இது ஒரு வழியாக முடிந்து பிரஸ்மீட் ஆரம்பித்தது.

செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, எடுத்த எடுப்பிலேயே, மிரட்டலாக பேச ஆரம்பித்தார்:

“இனிமே தயாரிப்பாளர் சங்கத்துல யாரும் பஞ்சாயத்து நடத்த முடியாது. யாராவது மிரட்ட நினைச்சா… சத்தமில்லாம “செய்துட்டு” போயிடுவோம்… “எங்களுக்கு இன்னொரு முகம் இருக்கு. ” என்று சினிமாவில் வரும் ரவுடி கேரக்டர் போலவே பேசினார்.

அருகில் இருந்த தலைவர் விஷாலும், துணைத் தலைவர் பிரகாஷ்ராஜூம் கைதட்டி வரவேற்றனர்.

இதெல்லாம் நல்லதா தோணல!

More articles

Latest article