மூக வலைதளமான டிவிட்டரை ஏராளமானோர் உபயோகப்படுத்தி வரும் நிலையில், பயனர் களின் பாதுகாப்பையும், வசதிகளையும் கருத்தில்கொண்டு மேலும் பல வசதிகள் ஏற்படுத்தி மேம்படுத்தி வருகிறது.

அதுபோல, சர்ச்சைக்குரிய கருத்துக்களும் அதிக  அளவில் பரவி வருகிறது. இதுபோன்ற எதிர் மறையான கருத்துக்களால் ஏற்படும் விபரிதங்களை தடுக்கும் வகையில்,  ‘ஹைடு டிவீட்’ எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது டிவிட்டர் நிர்வாகம்.

இந்த நிலையில், தற்போது, டிவிட்டரின்  பிரச்சனைகளை ஏற்படுத்தும் டிவிட்கள் குறித்து பயனாளியிடம் தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது, டிவிர்களில் புகார் அளிக்கும்போது, புதிய மெனு என்று தோன்றும். இதில் பயனாளிகள் தங்களது டிவிட்டர்கள் குறித்த விவரங்கள் பதிவிடப்பட வேண்டியது அவசியமாகிறது.  இந்த வசதி காரணமாக, டிவிட்டின் தன்மை குறித்து புரிந்துகொள்ள முடியும் என்று டிவிட்டர் தெரிவித்து உள்ளது.

அதுபோல, டிவிட்டர் பயனாளிகள், எதிர்கொள்ளும் டிவிட்கள் பற்றி அதிகளவு விவரங்களை தெரிவிக்க முடியும். இத்துடன் ரிப்போர்ட் பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.  இதை கொண்டு பயனாளிகள், பதிவிடப்பட்டுள்ள டிவிட்களால்  எந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை தெரிவிக்க முடியும்.

இதன காரணமாக,  பலரது குற்றச்சாட்டுகள் டாக்சிங் (டாக்சிங் என்பது ஒருவரின் அனுமதியின்றி அவரது விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் செயல்) ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

டிவிட்டர் நிறுவனம் சமீபத்தில் மேலும் சில வசதிகளை ஏற்படுத்த இருப்பதாக அறிவித்து உள்ளது. அதன்படி  டிவிட்டர் அகவுண்டில் இருந்து  பல டிவிட்டுகளை ஒரே நேரத்தில் அழிக்கக்கூடிய வசதி விரைவில் அறிமுகமாகும் என்று தெரிவித்து உள்ளது.

அதுபோல, தானாகவே அழியக்கூடிய டிவீட்டுகளை செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படும் என்று தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, பதிவிடப்படும் டிவிட்கள் சில மணி நேரமே, அல்லது சில நாட்களில் தானாகவே டெலிட் ஆகும் வகையில்  மாற்றியமைக்க முடியும்.

மேலும், ஸ்வைப் மூ ப்ளாக் (Swipe Move Block) மூலம் தம்மை பின்தொடர்பவர்கள் யாராவது இடையூறாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களை இலகுவான முறையில் ப்ளாக் செய்ய முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.