டில்லி

ர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்தியாவில் எந்த ஒரு விளையாட்டு போட்டியையும் நடத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இரு நாட்டு விளையாட்டுவீரர்களுக்கும் மற்ற நாட்டுடன் விளையாட தடை விதிக்கபட்டிருந்தது. இந்நிலையில் ஆசிய ஜூனியர் மல்யுத்த போட்டிகள் மற்றும் காமன் வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது.

அதை ஒட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்திய நாட்டுக்கு எந்த ஒரு விளையாட்டு போட்டியையும் நடத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இது குறித்து கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி அன்று சர்வதேச ஒலும்பிக் கமிட்டி எடுத்த முடிவின் படி இந்தியாவுக்கு எந்த ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாக்கள் ஆகியவைகளை நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.” என அறிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தியா பெரிதும் நிம்மதி அடைந்துள்ளதாக கருத்து தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக இந்திய நாட்டுக்கு வர அனைத்து நாட்டினருக்கும் விசா அளிக்க அரசுக்கு தேவை இருக்காது என்பதே அதற்கு முக்கிய காரணமாகும். மேலும் இந்தியா தற்போது விளையாட்டுப் போட்டிகள் அவசியம் நடத்தியே ஆக வேண்டும் என்னும் நிலையில் இருந்து விடுபட்டுள்ளது.

ஏற்கனவே ஸ்பெயின் நாட்டுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இது போல் விலக்கு அளித்துள்ளது. இந்தியாவில் வரும் ஜூன் மாதம் நடைபெறுவதாக ஹாக்கி தொடர் போட்டிகளும் இந்த அறிவிப்பினால் ரத்து செய்யப்பட உள்ளது. இந்த போட்டிகளில் ஜப்பான், மெக்சிகோ, போலந்த், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்துக் கொள்வதாக இருந்தன.