உத்திரப் பிரதேச மக்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம்

Must read

க்னோ

க்களவை தேர்தலை முன்னிட்டு உத்திரப் பிரதேச மக்களுக்கு காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கடிதம் அனுப்பி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி செயலரான பிரியங்கா காந்தி உத்திரப் பிரதேச மாநில கிழக்கு பகுதியின் பொறுப்பை ஏற்றுள்ளார்.   நேற்று லக்னோ வந்த இவர் இன்று பிரயாக் ராஜில் இருந்து மூன்று நாள் கங்கா யாத்திரை என்னும் பயணத்தை மேற்கொண்டுள்ளார்,   பிரியங்கா காந்தி வரும் மக்களவை தேர்தலை ஒட்டி உத்திரப்பிரதேச மக்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், “கங்கை நதி என்பது கங்கை யமுனை கலாசாரத்துக்கு மட்டுமின்று உண்மைக்கும் சமத்துவத்துக்கும் ஒரு சின்னம் ஆகும்.  காங்கிரஸ் வீரரான நான் தற்போது அரசின் தவறான அரசியலால் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளிகள் உள்ளிட்ட அனைவரும் துன்புறுவதை  அறிவேன்.

அவர்களுடைய குரல்கள் அரசியல் விளையாட்டால் வெளியே கேட்க முடியாமல் உள்ளது.  அதனால் அவர்கள் அரசின் எந்த ஒரு கொள்கை முடிவிலும் சேர்க்கப்படாமல் உள்ளனர்.

நான் உத்திரப் பிரதேச மண்ணை சேர்ந்தவள்.  நான் உங்கள் வலியை உணராமல் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்பதை நன்கு அறிந்தவள்.   அதனால்தான் நான் உங்கள் அனைவரையும் தொடர்பு கொண்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article