2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, பின்னர் விளம்பர படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து இந்தி சினிமாவில் கதாநாயகியாக ஜொலித்தார்.

தமிழில் ‘தமிழன்’ என்ற படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ளார்.

நிக் ஜோன்ஸ் என்ற பாடகரை திருமணம் செய்து கொண்ட பின், பிரியங்காவுக்கு ஹாலிவுட் படங்களில் வாய்ப்புகள் வந்தன. அவர் கடைசியாக நடித்த இந்திப்படம்- தி ஸ்கை இஸ் பிங்க்.

சமீபத்தில் ‘டெக்ஸ்ட் பார் யு’ என்ற ஆங்கிலப்படத்தில் நடித்து விட்டு மும்பை வந்துள்ளார்.

தனது வித விதமான கவர்ச்சி போட்டோக்களை தனது வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வலைத்தளத்தில் பதில் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஒரு ரசிகர் “உங்களை இந்தி சினிமாவில் பார்த்து ரொம்ப நாளாயிற்று. அடுத்த இந்திப்படம் எப்போது?” என ரசிகர் வினா எழுப்பி இருந்தார்.

அதற்கு பிரியங்கா “அடுத்த ஆண்டு” என ஒற்றை வரியில் பதில் சொல்லி உள்ளார்.

– பா. பாரதி