சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பிரபலமான தொடர்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார் நேகா மேனன்.

அதுவும் இல்லாமல் குழந்தை நட்சத்திரமாக நாரதன், ஜாக்சன் துரை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது குடும்பத்தில் நடந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி பற்றி அவர் தற்பொழுது பதிவிட்டுள்ளார். தனது தாய் கர்ப்பமாக இருந்ததாகவும், அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும், தனது தங்கை மருத்துவமனையில் நன்றாக இருக்கிறார் என்றும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

நடிகை நேகா மேனனுக்கு தற்போது 19 வயது ஆகிறது. இந்நிலையில் சிலர் இதைச் விமர்சித்ததையடுத்து அவர்களுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார். “இந்தச் செய்திக்குக் கிடைக்கும் குப்பை பதில்களுக்கு நான் எதுவும் செய்யப்போவதில்லை. உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.