பாலிவுட்டில் கோலோச்சிய நடிகை ப்ரியங்கா சோப்ரா  ஹாலிவுட்டிலும் கொடிநாட்டி வருகிறார். இவர் சமீபத்தில் பிகினி உடையில் ஒரு போட்டோஷுட் நடத்தினார்.  அதில் வெளிவராத சில படங்கள்.. அதுவும் ப்ரியங்கா விரும்பாத படங்கள்… சமூக வலைத்தளங்களில் லீக் ஆகிவிட்டன. இதனால் ப்ரியங்கா வருத்தத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

அதே நேரம் வேறு ஒரு பேச்சும் உலவுகிறது:

“ப்ரியங்கா நடித்த “பேவாட்ச்” என்ற ஹாலிவுட் திரைப்படம்  வரும் மே 25ஆம் தேதி  வெளியாகிறது. இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. தற்போது இந்த படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. படத்துக்கு விளம்பரமாக அமையும் என்பதால் அவர்களே வெளியிட்டுவிட்டு, யாரோ லீக் செய்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்” என்கிறார்கள்.

ஹூம்… உலகம் முழுசும் இப்படித்தானா?