‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தாமதமாவதால், ‘பூலோகம்’ இயக்குநர் கல்யாண் இயக்கவுள்ள தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் ஜெயம் ரவி.
இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயம் ரவி – ப்ரியா பவானி சங்கர் இணையும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் தற்போது தான் குறைந்து வருவதால் ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளனர்.