சிலம்பரசன் பாடியுள்ள புதிய ஆல்பம் பாடலின் டீசர் இன்று வெளியானது.

யுவன் சங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அபி & அபி என்டர்டைன்மென்ட் மற்றும் NOISE & GRAINS நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டர் நடன இயக்கம் செய்கிறார். இயக்குனர் டாங்லி ஜம்போ இயக்கும் இந்தப் பாடலில் பிரபல இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கின்றனர்.

பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ள தப்பு பண்ணிட்டேன் என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். இந்த புதிய ஆல்பம் பாடலை மேயாதமான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான விது அய்யனா ஒளிப்பதிவு செய்கிறார்.