தனியார் மருத்துவ கல்லூரிகள் 50% இடங்கள் அரசுக்கு ஒதுக்க வேண்டும்! ஐகோர்ட்டு

Must read

சென்னை,

னியார் மருத்துவ கல்லூரிகள்  தங்களிடம் உள்ள இடங்களில் 50% இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்த ஷாரோன் மற்றும் காமரான் ஆகியோர், தனியார் மருத்துவக்கல்லூரி களில் பட்ட மேற்படிப்பு  தொடர்பான படிப்புகளில் 50சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு,  பட்ட மேற்படிப்பில் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகழக மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்றும்,

இந்த இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்ப வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது. மேலும்,  சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அரசுக்க இடங்களை ஒதுக்க தேவையில்லை என்றும் கூறினர்.

மேலும்,  தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும். 50 சதவீத இடங்களை பெற நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் தலா ரூ.1 கோடி அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More articles

Latest article