செங்குன்றம்: சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புழல் சிறையில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது, செல்போன் உள்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

புழல் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள், வெளிநாட்டு கைதிகள், கொடூர குற்ற வழக்குகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என பல கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.   சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், 500-க்கும் மேற்பட்ட பெண்கைகதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறையில், அவ்வப்போது கைதிகளுக்கும் சிறை வார்டன்களுக்கும் இடையே மோதல் , கைதிகளுக்கு இடையே மோதல்கள் நடைபெற்று வருகிறது. மேலும், சிறையினுள்ளேயே  கத்தி, கஞ்சா, போதை மாத்திரைகள்  என அனைத்தும் சகஜமாக நடமாடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த நிலையில்,   கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனையின்போது,   கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதிகளுக்கு சப்ளை செய்த சிறை காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.  சிறை காவலர்கள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையின்போது, சிறை கைதிகள் மறைத்து வைத்திருந்த செல்போன் உள்பட பல போதைப்பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டடதாக தகவல் வெளியாகி உள்ளது.  சிறையில் உள்ள  குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கைதிகளிடம் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.