சென்னை: சேலத்தில் டிசம்பர் மாதம் திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ள நிலையில்,  கடல் இல்லாச் சேலம், கருப்பு – சிவப்புக் கடலினைக் காணட்டும் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் பிரமாண்டமாக  நடைபெற உள்ளது. இதுதொடர்பாக திமுக இளைஞரணி தலைவரும், அமைச்சரு மான மைச்சர் உதயநிதி பல்வேறுகட்ட ஆலோசனைகளை நடத்தி தேவையான நடவடிக்கைகைளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், இளைஞரணி மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  “டிசம்பர் 17 ஆம் நாள் சேலத்தில் ‘மாநில உரிமை மீட்பு’ முழக்கத்துடன் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு, இன்னும் சில மாதங்களில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சிக் களம் என்று  முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கழகம் வில்லாம்.. நின் அணியே கணையாம் நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

வாழ்வில் ஓர் பொன்னாள் என்று சொல்வது போல ஒரு சில நாட்கள் அமையும். போராட்டங்களும் நெருக்கடிகளும் சூழ்ந்த பொதுவாழ்வில் ஆட்சி என்பது சொகுசானதல்ல, அது கூடுதல் பொறுப்பாகும்.

அந்தப் பொறுப்பையேற்று, வருங்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் மக்கள் நலன் காக்கும் திட்டங்களையும், மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர்களை வருங்காலத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கும்போது மகிழ்வான தருணங்களாக அமையும். அத்தகைய நாட்கள் ஒவ்வொன்றும் வாழ்வில் ஒரு பொன்னாள்தான். இன்று அத்தகைய ஒரு பொன்னாள். அதற்குக் காரணம், சமூகநீதிக் காவலர் – இந்திய ஒன்றியத்தின் ஏழாவது பிரதமர் வி.பி.சிங் அவர்களின் திருவுருவச் சிலையைத் தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில், அதுவும் நான் பயின்ற மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் என்ற முறையில் இன்று திறந்து வைக்கும் பெருமிதமான நிகழ்வு நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு.அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, திரு.வி.பி.சிங் அவர்களின் துணைவியார் திருமதி.சீதாசிங் மற்றும் வி.பி.சிங் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்கும் இனிய விழாவாக அது அமையவுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம், தெலுங்குதேசம், ஜன மோர்ச்சா, ஜனதா, காங்கிரஸ்(எஸ்), அசாம் கண பரிஷத், லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேசிய முன்னணி உருவானது. தலைவர் கலைஞர் அவர்களுடன் வி.பி.சிங் அவர்களும், என்.டி.ராமராவ் உள்ளிட்ட தலைவர்களும் பார்வையிட்ட தேசிய முன்னணி தொடக்க விழாப் பேரணியில் கழகத்தின் இளைஞரணி வீறுநடை போட்டு அணிவகுத்து வந்தபோது மிகப் பெரிய அளவில் எழுச்சி ஆரவாரத்தைக் காண முடிந்தது.

தி.மு.கழகத் தொண்டர்களை உடுப்பணியாத ராணுவம் என்றார் பேரறிஞர் அண்ணா. அந்த உடுப்பணியாத ராணுவம், கலைஞர் காலத்தில் உருவாக்கப்பட்ட இளைஞரணியால், உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையில் சீருடை தரித்து, உடுப்பணிந்த ராணுவம் போல பேரணிகள் பலவற்றை பீடுநடைபோட்டு, பெருமிதத்துடன் நடத்திக் காட்டியது. தேசிய முன்னணி தொடக்க விழா பேரணி அறிவாலயத்தில் தொடங்கி, அண்ணா மேம்பாலத்தில் ஏறி, அண்ணா சாலையில் அணிவகுத்தபோது வங்கக் கடல்தான் மனிதத் தலைகளாகத் தலைநகர் சென்னையில் புகுந்ததோ என்று அகில இந்தியத் தலைவர்கள் பலர் வியக்கும் வகையிலும், தி.மு.க.வின் அரசியல் எதிரிகள் வியர்க்கும் வகையிலும் பிரம்மாண்டமாக அமைந்தது.

அதன்பிறகு, 1990-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டிலும், அதே ஆண்டு முப்பெரும் விழாவை ஐம்பெரும் விழாவாக (பெரியார் – அண்ணா – தி.மு.கழகம் பிறந்தநாள் ஆகியவற்றுடன் டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு மற்றும் மண்டல் கமிஷன் வெற்றி விழா இவற்றையும் இணைத்து) கொண்டாடியபோது, தலைநகர் சென்னை குலுங்க மற்றொரு மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த மூன்று பேரணிகளிலும் உங்களில் ஒருவனான என் தலைமையில் பட்டாளத்துச் சிப்பாய்கள் போல கழகத்தின் இளைஞரணியினர் வெண்சீருடையில் வீறுநடை போட்டு வந்ததை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் கண்டு மகிழ்ந்ததையும், அது குறித்து அவர் ஆச்சரியத்துடன் வினவியபோது, “என் மகன்“ என்று தலைவர் கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டி, என் உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கியதையும் மறக்க முடியாது.

இளைஞரணியின் பிரம்மாண்டமான பேரணியுடன் தொடங்கப்பட்ட தேசிய முன்னணிக்கு தேர்தல் களத்தில் முதல் மகத்தான பெரும் வெற்றியைப் பெற்றுத்தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்தான். அவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு ஆட்சியை அமைத்தது. திரு.வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தான் கட்டி முடித்த வான்புகழ் வள்ளுவர் கோட்டத்தில் முதல் முறையாக கால் பதித்து, மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றார். உங்களில் ஒருவனான நான் முதன் முதலாக ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதும் அந்தத் தேர்தல்களத்தில்தான்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து 1989-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியின் ஆட்சி அமைந்தது. வி.பி.சிங் அவர்கள் பிரதமர் பொறுப்பினை ஏற்றார். அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது, என்னிடம் தன் அன்பைப் பொழிந்ததுடன், பேரணியை முன்னின்று நடத்தி வந்த பாங்கையும் பாராட்டி மகிழ்ந்தார். அதைவிட அவர் நமக்குத் தந்த பெருமகிழ்ச்சி என்பது, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி – இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கிடைக்கச் செய்ததுதான்.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் கொள்கையாக மாற்றிக் காட்டியவர் வி.பி.சிங். அவருடைய இந்தச் சிறப்பான முடிவின் பின்னணியில் ஊக்கசக்தியாக விளங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். ச