ண்டன்

ங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது திருமணத்துக்கு பரிசளிப்பதற்கு பதில் மும்பை தன்னார்வு தொண்டு நிறுவனத்துக்கு நிதி உதவி அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் மெகன் மார்கிளும் அடுத்த மாதம் 19ஆம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப் போகின்றனர்.    மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்தத் திருமணத்துக்கு உலகெங்கும் இருந்து விருந்தாளிகள் வர உள்ளனர்.    அத்துடன் அரச குடும்ப திருமணத்துக்கு பரிசுகள் குவியும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் இளவரசர் ஹாரி தனது திருமணத்துக்கு பரிசளிக்க விரும்புவோர் ஏதாவது தொண்டு நிறுவனத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.   தற்போது அவர் மும்பையில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான மைனா மகிளா ஃபவுண்டேஷன் என்னும் நிறுவனத்துக்கு நிதி உதவி அளிக்குமாறு கூறி உள்ளார்.

மைனா மகிளா ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனம் குடிசையில் வாழும் பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவி வருகிறது.  தனது தொண்டுகளில் ஒன்றாக ஏழைப் பெண்களுக்கான குறைந்த விலை நாப்கின்கள் தயாரிக்க பெண்களுக்கு இந்த நிறுவனம்  உதவி வருகிறது.  சென்ற வருடம் இந்தியாவுக்கு சுற்றுப் பயனம் வந்த மெகன் மார்கிள் இந்த நிறுவனத்தின் மகளிர் சேவையை நேரில் கண்டுள்ளார்.  அதனால் மனம் மகிழ்ந்த அவர் இந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளார் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

மைனா மகிளா ஃபவுண்டேஷன் இதற்காக தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது.  இந்த நிறுவனத்தின் அமைப்பாளர் சுகானி ஜலோடா, “இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கிள் திருமணத்தில் பங்கு வகிப்பதில் மைனா மகிளா ஃபவுண்டேஷன் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.   இந்த உதவியினால் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் மேலும் கிடைக்கும்.   மற்றும் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் அதனால் அவர்கள் வாழ்க்கைத் தரம் முன்னேறவும் வாய்ப்பு உண்டாகும்”  என தெரிவித்துள்ளார்.