மலான் பண்டிகை வருவதையெட்டி,  ஐக்கிய அரபு அமீரகம் சிறையில் இருந்து 560 கைதிகளை விடுவிக்க துபாய் தொழிலதிபர் ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வரும் ஜூன் 16ந்தேதி இஸ்லாமியர்களின் பண்டிகையான ரமலான் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், துபாயை சேர்ந்த தொழிலதிபர் பிலிண்ட்பிரைஸ்ட்  பிரோஸ் என்பவர் தனது நிறுவனம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 560 கைதிகளை விடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பல்வேறு கடன்தொகை காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, அவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை தனது நிறுவனம் மூலம் செலுத்தி அவர்களை விடுவிக்க செய்து, அவர்கள் தங்களது குடும்பத்தோடு இணைய,  அவர்களுக்கு தேவையான விமான டிக்கெட்டுக்களும் எடுத்து கொடுத்து உதவி செய்துள்ளார்.

துபாயை சேர்நத  தொழிலதிபர் பிலிண்ட்பிரைஸ்ட்  பிரோஸ் பிரபல தங்க வியாபாரி என்று கூறப்படுகிறது. இவரின், பிரோஸ் மெர்ச்ன்ட், தங்கம் விற்பனை நிறுவனமான பைர்ட் கோல்டு குரூப் சார்பில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் செலுத்த வேண்டிய பணத்தை நன்கொடையாக அளித்து 560 கைதிகளை விடுவித்துள்ளார்.

அதன்படி,  அஜ்மான் மத்திய சிறையில் இருந்து 300 கைதிகளும்,260 கைதிகள் மற்ற ஜெயில்களில் இருந்தும் விடுவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிண்ட்பிரைஸ்ட்  பிரோஸ் ஏற்கனவே தனது மெர்சன்ட் சொசைட்டி சார்பில், கடந்த 10 ஆண்டுகளில் 15,000 க்கும் அதிகமான கைதிகளை விடுவித்து,  அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்க உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல  மெர்ச்சண்ட் நிறுவனத்தின் தொண்டு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக 0 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.