வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹனின் அலுவலகத்தை அமெரிக்க புலனாய்வுத் துறை சோதனை செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் தனக்கு உறவு இருந்ததாக நீலப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தெரிவித்திருந்தார்.   மேலும் ட்ரம்ப் தனக்கு பணம் தரவேண்டி இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.   அதற்கு ட்ரம்ப் இன் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் நடிகைக்கு தர வேண்டிய பணத்தை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பே தாம் அளித்து விட்டதாக தெரிவித்தார்.   அதிபர் ட்ரம்ப் இது பற்றி தமக்கு எதுவும் தெரியாது எனக் கூறி விட்டார்.

தற்போது மைக்கேல் கோஹனின் அலுவலகத்தை அமெரிக்க புலனாய்வுத் துறை சோதனை செய்தது.   இந்த சோதனை அமெரிக்க நாட்டை பரபரப்புக்குள்ளாக்கியது.  அமெரிக்க அரசு வழக்கறிஞர் இந்த சோதனைக்கும் ரஷ்யாவுக்கும் ஏதும் சந்தேகம் இருக்குமா என்னும் கேள்வியை மறுத்துள்ளார்.  மேலும் அமெரிக்க சட்டத்துறை இந்த சோதனை குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்க மறுத்து விட்டது.

தற்போது நடிகை டேனியல்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு வர வேண்டிய தொகை வந்து விட்டதால் தனக்கும் அதிபர் ட்ரம்புக்கும் உள்ள ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்.   அவருக்கு $130,000  வழங்கியதாக வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் அறிவித்திருந்ததால் அந்த ஆவணங்களுக்காக இந்த சோதனை நடைபெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.