தராபாத்

ர்வதேச பாட்மிண்டன் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த்துக்கு முதல் இடம் கிடைக்க உள்ளது.

சர்வதேச பாட்மிண்டன் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் தயாராகி வருகிறது.    தற்போது கணினி மூலம் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.   வீரர்கள் கலந்துக் கொண்ட போட்டிகள்,  வெற்றிகளின் எண்ணிகை,  வெற்றி பெற்ற செட் விவரங்கள் உள்ளிட்ட பல காரணிகள் ஆராயப்பட்டு இந்த வரிசை தயார் செய்யப்படுகிறது.

கணினி பயன்பாட்டுக்கு வரும் முன் இந்திய வீரர் பிரகாஷ் படுகோனே கடந்த 1980ஆம் வருடம் முதல் இடத்தை பிடித்துள்ளார்.   அதன் பிறகு இதுவரை அந்த இடத்தை ஆண்கள் வரிசையில் யாரும் பிடிக்கவில்லை.    தற்போது இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த கிடம்பி ஸ்ரீகாந்த் 76895 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.  சென்ற வருடம் முதல் இடத்தில் இருந்த விக்டர் ஆக்ஸிசென் 77130 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளார்.

சென்ற வருடம் கிடம்பி ஸ்ரீகாந்த் காயமுற்றதால் அவரால் முதல் இடத்தை அடைய முடியவில்லை.    தற்போது இவர் தரவரிசைப் பட்டியலில் அதிக புள்ளிகளுடன் இருப்பதால் விரைவில் இவர் முதலாம் இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்படுவார் என தெரிய வந்துள்ளது.

நவீன ஆண்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பெற உள்ள முதல் இந்தியர் ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.   கடந்த 2015ஆம் வருடம் பெண்கள் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் முதலிடம் பெற்றுள்ளார்.