டில்லி:

அரபு நாடுகளில் இருந்து ஈரான் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய தொழிலாளர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய வெளியுறவு துறையின் வெளிநாட்டு குடியேற்ற பாதுகாப்பு ஜெனரல் லூதர் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘சவுதி அரேபியா, பக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் அங்கிருந்து ஈரான் நோக்கி செல்லும் மீன் பிடி கப்பல்கள் மற்றும் பயண கப்பல்களில் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்பை பின்பற்ற தவறினால் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். அதோடு உயிருக்கும் ஆபத்தை விளைவிக்க கூடிய அபாய் ஏற்படும். அரபு நாடுகளில் கடத்தலை தடுக்கும் வகையில் ஐஆர்ஜிசி கடற்பபை சோதனை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. ஈரானிய கடற் பகுதிக்குள் நுழையும் மற்றும் ஈரானிய கடற்பகுதியை கடந்து செல்லும் கப்பல்கள் இந்த சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளது.

அதனால் ஏஜென்சிகள் இந்திய தொழிலாளர்களை ஈரான் நோக்கி செல்லும் மீன்பிடி கப்பல்களில் பணியமர்த்த வேண்டாம். இத்தகைய பணிகளுக்கு குடியேற்ற அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் கூடுதன் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.