லண்டன்:
லிசபெத் மறைவை அடுத்து, 73 வயதில் இங்கிலாந்தின் புதிய அரசரானார் பட்டத்து இளவரசர் சார்லஸ்.

இங்கிலாந்து அரச வழக்கப்படி மகராணி இரண்டாம் எலிசபெத் இறந்த அடுத்த நிமிடமே பட்டத்து இளவரசர் மன்னர் என அழைக்கப்படுவார். மன்னருக்கு யாரும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில்லை.

அவர் 3-ஆவது சார்லஸ் என்று அழைக்கப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வரலாற்றில் வயதான அரசராக சார்லஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகளுக்கு எதிரான இனவெறி குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு சவால்கள் இவருக்கு முன் இருக்கின்றன.

சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் உயிரிழந்த 2-ம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தனது முதல் மனைவியான இளவரசி டயானாவை 1996-ம் ஆண்டில் விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து டயானா 1997-ல் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் தற்போதும் மர்மம் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து 2005-ம் ஆண்டு கமிலா என்பவரை சார்லஸ் 2-வது திருமணம் செய்துகொண்டார். இங்கிலாந்தின் புதிய அரசராக சார்லஸ் அரியணை ஏற உள்ள நிலையில் ராணியாக கமிலா அரியணை ஏறுகிறார்.

பிரிட்டன் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தால் செய்யப்பட்ட கீரிடம் இனி கமிலா வசம் செல்லவுள்ளது.