முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை!

Must read

டில்லி,
நாட்டின் பாதுகாப்பு குறித்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
மேலும் உரி தாக்குதல் மற்றும்  சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்குப் பிறகு,  நாட்டின் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க தலைவன் ஹபீஸ் சயீத்-ன் தாக்குதல் குறித்த பேச்சு, காஷ்மீரில் நடைபெறும் வன்முறை  குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது.

மோடியுடன் முப்படை தளபதிகள் (பழைய படம்)
மோடியுடன் முப்படை தளபதிகள் (பழைய படம்)

இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரும் கலந்துகொண்டார்.
இதற்கிடையில், இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, விமானப்படை தளபதி அருப் ராஹா நேற்று டெல்லியில் விருந்து அளித்தார்.
அதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விருந்தின்போது, ராணுவ தளபதி தல்பீர்சிங், விமானப்படை தளபதி அருப் ராஹா, கடற்படை தளபதி சுனில் லம்பா ஆகியோருடன் பிரதமர் மோடி சாதாரண முறையில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பின்னர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியுடன் சேர்ந்து மற்ற விருந்தினர்களுடன் மோடி உரையாடினார்.
 

More articles

Latest article