நாகர்கோவில்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் விதமாக பிரதமர் மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொண்டார். இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார். மேலும் அண்ணாமலையையும், பிரதமர் மோடி அழைத்து, தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி  நேற்று  நாகர்கோவில் வந்தார்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டயிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி   குமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். நேற்று  பிற்பகல் 3.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட் பிரதமர் மோடி. மாலை 4.10 மணிக்கு நாகர்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் அவரின் ஹெலிகாப்டர் வந்திறங்கியது. தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு, வெப்பமூடு சந்திப்புக்கு பிரதமர் காரில் வந்த பிரதமர் மோடி, வெப்பமூடு சந்திப்பில் இருந்து பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டார்.

நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி எம்ஜிஆர் சிலை வரை பிரதமர் மோடி ரோடு ஷோ சென்றார். அப்போது சாலைகளின் இருபுறமும் இருந்த தொண்டர்கள் பூக்கள் தூவி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடியின் பரப்புரை வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

 கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் நின்றவாறு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பிரதமர் மோடி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் ரோடு ஷோ வந்தார். அப்போது அவருக்கு பூக்கள் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரோடு ஷோ நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாலையில் மீண்டும் கார் மூலம் ஆயுதப்படை மைதானத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்., அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.

பிரதமர் நரேந்திரமோடி வருகையை முன்னிட்டு, திருவனந்தபுரம் விமான நிலையம் முதல் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானம் வரை ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டது. ரோடு ஷோ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்துள்ளனர். நாகர்கோவில் நகரம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.