டில்லி:

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு வானொலி மூலம்  நாட்டு மக்களுக்கு உரையாற்ற  இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான நேரத்தை இரவு 8 மணிக்கு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.  முன்னதாக மாலை 4 மணிக்கு உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது . தற்போது அது ரத்து செய்யப்பட்டு இரவு 8 மணிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35A ரத்து மற்றும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் . ஜம்மு காஷ்மீர் சட்டமன்றமுள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு,  அதற்கான மறுசீர்திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு பாராளுமன்றத்தின் இரு நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பி வரும் நிலையில் சிறுபான்மையின மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.